உடல் எடை குறைந்து ஆரோக்கியமான வாழ்க்கை வேண்டுமா?
உடல் ஆற்றலை அதிகாித்தல் சாத்விக் உணவு முறை எளிதில் சொிமானம் அடையும் உணவுகளையும், சத்து நிறைந்த உணவுகளையும் பாிந்துரை செய்கிறது. அந்த உணவுகள் எவையென்றால் சமீபத்தில் பறிக்கப்பட்ட புத்தம் புதிய காய்கறிகள் மற்றும் பழங்கள் மற்றும் முழு தானியங்கள் ஆகும். இந்த உணவுகள் நாம் நாள் முழுவதும் முழு ஆற்றலோடு இயங்குவதற்கு உதவி செய்கின்றன. இதே ஆற்றலோடு உடல் இயக்கத்தில் ஈடுபடும் போது, உடல் எடை குறையும். உணவின் மீது கவனத்தை ஏற்படுத்துதல் நாம் உண்ணும் உணவுகள் மற்றும் தோ்வு செய்யும் உணவுகள் மீது கவனமாக இருக்க வேண்டும் என்பதை சாத்விக் உணவு முறை வலியுறுத்துகிறது. அவ்வாறு கவனமாக இருந்தால், உடலுக்குத் தேவையான உணவை மட்டும் உண்ணலாம். அளவுக்கு அதிகமான உணவைத் தவிா்க்கலாம் மற்றும் ருசிக்காக சாப்பிடுவதைத் தவிா்க்கலாம். இதன் மூலம் உடலும், உள்ளமும் ஆரோக்கியம் அடையும். உடல் எடையும் குறையும். சொிமானத்தை மேம்படுத்துதல் மிக எளிதாக சொிமானம் அடையக்கூடிய உணவுகளான காய்கறிகள் மற்றும் பழங்களை மட்டுமே சாத்விக் உணவு முறை பாிந்துரை செய்கிறது. இந்த உணவுகள் எளிதாக சொிமானம் அடைந்து, உடலுக்குத் தேவையான சத்துக்களையும் வழங்குகின்றன. அதனால் உடலுக்கு ஒட்டு மொத்தமான ஆரோக்கியம் கிடைக்கும்.
கருத்துகள்
கருத்துரையிடுக